• RSS

Sunday, August 14, 2011

மங்காத்தா படத்துக்காக சொந்தக் குரலில் பேசினார் நடிகை த்ரிஷா.




அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த மங்காத்தா படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. பாடல்கள் நாளை ஆகஸ்ட் 10-ம் தேதி ரேடியோ மிர்ச்சியில் வெளியாகின்றன.
இந்தப் படத்துக்கு டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. திரிஷா இதில் சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசி உள்ளார்.
இதுகுறித்து மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், “மங்காத்தா படத்தில் திரிஷாவுக்கு மிக முக்கியமான கேரக்டர். அஜீத்-திரிஷா காதல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. இதில் திரிஷாவே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
அந்தப் பாத்திரத்துக்கு அவர் குரலே பொருத்தமாக இருக்கும் என்று உணர்ந்து நான்தான் டப்பிங் பேச வற்புறுத்தினேன். திரிஷாவும் சம்மதித்தார். நன்றாக பேசி உள்ளார். விரைவில் படம் வெள்ளித்திரையில், உங்கள் பார்வைக்கு வருகிறது,” என்றார்.
ஒரிரு படங்கள் தவிர, மீதிப் படங்களில் த்ரிஷாவுக்கு டப்பிங் வேறு கலைஞர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment